Posts

Showing posts from November, 2017

கல்யாணத்தை நிர்ணயிக்கும் கட்டங்கள் எவை?

Image
  திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிரதான நோக்கமே திருமணம் வழியான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. மணவாழ்க்கை சிலருக்கு மிக எளிதாக கூடி வந்து விடும். ஒரு சிலருக்கு சிறிது முயற்சி களின் மூலம் நடக்கிறது. பலருக்கு கிரகதோஷ அம்சங்களால் பல ஜாதகங்களை பார்த்து பிரம்மப் பிரயத்தனம் செய்த பிறகு தான் திருமண பந்தம் கூடி வருகிறது. திருமணம் என்றவுடன் பிள்ளையார்சுழி போடுவதுபோல் முதலில் நிற்பது ஜாதகம்தான். கல்யாணப் பேச்சை எடுத்ததுமே. ஜாதகம் பார்த்தாச்சா? கிரக பலன் என்ன சொல்லுது. தோஷம் இருக்கா என்று உற்றார், உறவினர், நண்பர்கள் என மாறி மாறி கேட்பார்கள்.  சிலருக்கு திருமண பிராப்தம் கூடிவராமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர் கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லா வகையிலும் முயற்சி செய்தாகி விட்டது. பலவகைகளில் ஜோதிடமும் பார்த்தாகி விட்டது. பல முறை குருபலன் வந்து போய் விட்டது. பல கோயில்கள் சுற்றியும், பரிகார பூஜைகள் செய்தும் கல்யாண யோகம் இன்னும் கூடி வரவில்லை என எத்தனையோ பேர் ஏக்கப் பெருமூச்சு விடுக...