Posts

Showing posts with the label songs

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

Image
முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா  முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா  மயில் மீது நடமாடி வருவான் முருகன்  மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்  முத்துக்குமாரனடி அம்மா அம்மா  முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா  வடிவேலை கைகொண்டு வருவான் முருகன்  வந்த வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா  கோழிக்கொடி கொண்டு வருவான் குமரன்  கொடிய வினைத்தீர்த்திடுவான் அம்மா அம்மா  முத்துக்குமாரனடி அம்மா அம்மா  முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா  வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்  கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்  கைவிட்டு விடுவாயோ என்றேன் (3)  வண்ண மயில் மீதேறி வருவான் முருகன்  கன்னம் அதை தொட்டால் கையைப் பிடிப்பான்  கைவிட்டு விடுவாயோ என்றேன் எனை  கைவிட்டு விடுவாயோ என்றேன்  கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான் முருகன் கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான்  முத்துக்குமாரனடி அம்மா அம்மா  முன்னை வினை தீர்த்திடுவான் அம்மா அம்மா ...

LORD MURUGAN / சத்ரு சங்கார வேற்பதிகம்

Image
உ   ஸ்ரீ கணேசாய நம : ஸ்ரீ குமார குருதாஸ சுவாமிநே   நம: காப்பு சண்முகக் கடவுள் போற்றி ! சரவணத்(து) உதித்தோய் போற்றி! கண்மணி முருகா போற்றி ! கார்த்திகை பாலா போற்றி! தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி ! விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி ! போற்றி !! நூல் அப்பமுடன் அதிரசம் பொரிகடலை துவரை வடை அமுது செய் இபமுகவனும் ஆதிகேசவன் இலட்சுமி திங்கள் தினகரன் அயிராவதம் வாழ்கவே ! முப்பத்து முக்கோடி வானவர்கள் இடர்தீர முழுது பொன்னுலகம் வாழ்க! மூவரொடு கருட கந்தருவர் கிம்புருடரும் முதுமறைக் கிழவர் வாழ்க ! செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன்    திருமங்கலம் வாழ்கவே ! சித்த வித்யாதரர் கின்னரர்கள் கனமான தேவதைகள் முழுதும் வாழ்க ! சப்தகலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப சரஹணனை நம்பினவர் மேல் தர்க்கமிட நாடினரைக் குத்தி எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே. ( 1)  சித்தி சுந்தரி கெளரி அம்பிகை க்ருபாநிதி சிதம்பரி சுதந்தரி பர சிற்பரி சுமங்கலி நிதம்பரி விடம்பரி சிலாசுதை விலாச விமலி குத்து திரிசூலி திரிகோணத்தி ஷட்கோண கு...