Posts

Showing posts with the label கோயில்

*இராமேஸவரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள்:*

Image
ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும், பக்தர்களாலும் கவனிக்கபடாமல், பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர்  கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார். மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம். இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை. இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய பிராப்தம் இருந்தால்...

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் ?  ( ஒரு அறிவியல் பூர்வமான அலசல் ) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும் . பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது . விளக்கம் : பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான அமைவிடம் ஆகும் . இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்கள் , மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் அடையாளம் . கோயில்களில் ஒரு அபரிவிதமான காந்த சக்தியும் , நேர்மறை சக்தியும் அதிகமாக இருக்கும் . இது வடமுனை தென்முனை விசை வகையைச் சேர்ந்தது ஆகும் . முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றிருக்கும் . அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம் . இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அந்த காந்த மற்றும் நேர்மறை சக்தி அதிகம் காணப்படும் இடம் ஆகும் . ...