MONEY (Millionaire) / கோடீஸ்வரரா! லட்சாதிபதியா!!
இன்றைய நாகரீக உலகில் பணம் தான் பிரதானம் மற்றெல்லாம் அதன் பின்னாலே தான் பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே பணம் இல்லாதவன் பிணத்திற்க்கு சமம் என்ற பழமொழிகள் எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் உண்மையானவை எனத்தான் தோன்றுகிறது. ஆனாலும் வாழ்க்கை என்பதே பணம் தேடுவது மட்டும் தான் என்று பலர் நினைக்கிறார்கள். இதற்கு மனம் தான் காரணம். மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் இருப்பதில்லை. மனத்தைப் பெற்ற மனிதன் நல்லவழியிலோ அல்லது தீயவழியிலோ பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என நினைக்கிறான் ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடைபெறுவதில்லை மனம் நினைப்பது நடந்து விட்டால் தெய்வமேது. வாழ்க்கையில் நமக்கு முன் வினைப்பயனாக கிடைப்பது பிராப்தம் அது தான் விதி. முற்பிறவியில் செய்த நல்வினை-தீவினைக் கேற்ப்ப இவ்வுலக வாழ்க்கைத் தரம் அமைகிறது. இதைத் தாக் FREE WILL என்கிறோம். நாம் வாழ்க்கையில் எதைச் சாதிக்கிறோம் என்பதை மாற்ற முடியாது அதுதான் விதி. அதை இவ்வாழ்க்கையில் நடைமுறையில் எந்த விதத்தில் அவைகளை சந்திக்கிறோம், அதை எப்படி சந்தித்து மாற்றுகிறோம் என்பது ஒவ்வொருவரின் விடாமுயற்சியிலே இருக்