MARS DHOSAM / செவ்வாய் தோஷ சாந்தி நீங்களே செய்து கொள்ளலாம்....
திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கிறார்கள். செவ்வாய் தோஷம் என்றாலே ஒரு அலர்ஜி மாதிரி ஆகிவிட்டது. ஆண், பெண் இருபாலர் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு 2-4-7-8-12 ல் செவ்வாய் இருந்தால்-செவ்வாய் தோஷம் என்று சொல்கிறார்கள். லக்னத்திற்கு பார்ப்பது போல் சந்திரனை வைத்தும், சுக்கிரனை வைத்தும் மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் தான் என்று சொல்லப்படுகிறது. செவ்வாயுடன் குரு, சனி, ராகு, கேதுக்கள் கூடி இருந்தாலும் பார்வை ஏற்பட்டாலும் தோஷ நிவர்த்தியாகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் செவ்வாய் தோஷமிருந்து இரு ஜாதகங்களையும் சேர்ப்பது தான் உத்தமம். செவ்வாய் தோஷமுள்ள ஜாதகங்கள் திருமணத்தடை, தாமத திருமணம், திருமணத்திற்க்குப் பின் பிரச்சனைகள் ஏற்படுதலைக் குறிக்கின்றன. ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷமிருந்து திருமணம் கூடி வந்தால்- திருமணத்திற்க்கு முன் செவ்வாய் தோஷ சாந்தி செய்து கொள்வது அவசியம். இதே போல் திருமணத்தில் தடை ஏற்பட்டாலும் தடை நீங்க சாந்தி பரிகாரம் செய்து கொள்ளலாம். செவ்வாய் சேத்திரமான வைத்தீஸ்வரன்...