Posts

Showing posts from March, 2019

மூச்சுக் கணக்கு

சித்தர்களும் ஞானிகளும் யோகிகளும் அருளியுள்ள மூச்சுக் கணக்கு!  நீளாயுள் பெற்றுய்ய! தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி. இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:- உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில், ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள், நாழிகை ஒன்றுக்கு  360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன.  மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். ...

யோகங்கள் 135

ஜாதக யோகங்கள் ஒவ்வொருவரும் இந்த மண்ணில் ஜனனமாகும் போது  இறைவனால் நூற்றி முப்பத்தி ஐந்து வகையான ஜாலங்கள் லோடயாகக் கொடுக்கப்படுகின்றது அவரவர் பிறப்பின் கிரக நிலைப்படி யோகங்களை அனுபவிப்பர் 1, சுனபா யோகம் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர். நல்ல அறிவு நிரம்ப பெற்றவர். பெரும் புகழும் உடையவர், சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர். 2, அனபா யோகம் சந்திரனுக்கு 12ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது. பலன் சிறந்த உடல்வாகு கம்பீரமான பார்வை தர்ம சிந்தனை மிக்கவர். பெரும் புகழும் உடையவர், 3, துருதுரா யோகம் சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது. பலன் கடமை உணர்வு மிக்கவர், பொன் பொருள் சேர்கை மிக்கவர். நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர். 4, கேம துர்ம யோகம் சந்திரனுக்கு இரு பக்கங்களிலும் கிரகம் இல்லாமல் இருந்தால் கேம துர்ம யோகம் உண்டாகிறது. பலன் இந்த யோகம் உடையவர்கள் த...

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் ?  ( ஒரு அறிவியல் பூர்வமான அலசல் ) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும் . பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது . விளக்கம் : பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான அமைவிடம் ஆகும் . இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்கள் , மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் அடையாளம் . கோயில்களில் ஒரு அபரிவிதமான காந்த சக்தியும் , நேர்மறை சக்தியும் அதிகமாக இருக்கும் . இது வடமுனை தென்முனை விசை வகையைச் சேர்ந்தது ஆகும் . முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றிருக்கும் . அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம் . இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அந்த காந்த மற்றும் நேர்மறை சக்தி அதிகம் காணப்படும் இடம் ஆகும் . ...