விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?

Dr.ஆண்ட்ரூ தத்தா என்பவர் 2015ம் ஆண்டு ஸ்டார் ஸ்டெல்லார் அஸ்ட்ராலஜி எனும் புத்தகத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சாரத்தை இங்கு தருகிறேன்.

கோள்களுக்கு ஒதுக்கப்பட்ட விம்சோத்தரி திசை ஆண்டுகள் பற்றி தெளிவாக இதுவரை யாரும் கூறவில்லை.
இது சம்பந்தமாக கட்டுரையாளர் தத்தா சில வெளிச்சங்களை காட்டுகிறார்.

விம்சோத்தரி திசை  120 ஆண்டுகளில் ராகுவுக்கு 18 ஆண்டுகள் ஒதுக்கப்பட்டு அதன் எதிரில் உள்ள கேதுவுக்கு 7ஆண்டுகள் மட்டும் ஏன் ஒதுக்கப்பட்டது?

மெதுவாக செல்லும் பெரிய கோளான சனிக்கு 19ஆண்டுகள் ஒதுக்கி விட்டு வேகமாக செல்லும் சிறிய கோளான புதனுக்கு 17 ஆண்டுகள் ஏன் ஒதுக்கப்பட்டது?

இது போன்ற கேள்விகளுக்கு இன்றைய ஜோதிடர்களிடம் தகுந்த பதில் இல்லை.

இதற்கான பதில் நிச்சயம் நம் முன்னோர்களிடம் இருந்திருக்கும். அவை ஓலைச்சுவடிகளிலோ களிமண் ஏடுகளிலோ பதிவாகி இருக்க கூடும்.ஆனாலும் தற்போது நம்மிடம் இல்லை.

இங்கு என் தாய்வழித் தாத்தா அவரது டைரியில் எழுதி வைத்திருந்த சில குறிப்புகளிலிருந்து உங்களுக்கு விளக்குகிறேன்.

இது எனது பத்து ஆண்டுகால முயற்சியின் பலனாக ஜோதிட உலகத்துக்கு முதன் முதலாக வெளிப் படுத்துகிறேன்.
,
விம்சோத்தரி திசையில் பூமிக்கு வெளியே உள்ள கோள்களில் ராகு-18, செவ்வாய்-7, குரு-16, சனி-19 ஆண்டுகள் என 60 ஆண்டுகள் திசை நடத்துகின்றன. பூமிக்கு உள் வட்ட கோள்களில் சந்திரன்-10, சுக்கிரன்-20, புதன்-17, சூரியன்-6, கேது-7ஆண்டுகள் என 60ஆண்டுகள் திசை நடத்துகின்றன. ஆக விம்சோத்தரி திசை 120 வருடங்கள்.

இந்த 120 வருட கணிதம் வந்து எப்படி என பார்ப்போம்.

விஷ்ணு புராணத்தில் சொல்லியவாறு
360 நாட்கள் கொண்ட ஒரு மனித ஆண்டு=தேவர்களுக்கு 1 நாள்.
ஒரு தேவனின் ஆயுள் =12000 தேவ ஆண்டுகள்.
அதாவது 12000×360=43,20, 000 மனித ஆண்டுகள்
                                     =ஒரு மகா யுகம்.

பிரம்மாவின் ஆயுள்=1000 மகா யுகங்கள்
                                   = ஒரு கல்பம்

ஒவ்வொரு மகாயுகமும் 10 சரணங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.

ஒரு சரணத்தின் ஆண்டுகள்=4,32,000 ஆண்டுகள்.

ஒரு மகாயுகம்(43,20,000) ஆண்டுகள் சத்ய-திரேதா-துவாபர-கலி யுகங்கள் என நான்காக பிரிக்கப் பட்டுள்ளன. அவற்றின் விபரம்.

சத்ய யுகம்-       - 17,28,000 ஆண்டுகள்(4×4,32,000)=4 சரணங்கள்
திரேதா யுகம்    - 12,96,000 ஆண்டுகள்(3×4,32,000)=3 சரணங்கள்
துவாபர யுகம்   -   8,64,000 ஆண்டுகள்(2×4,32,000)=2 சரணங்கள்
கலி யுகம்          -   4,32,000 ஆண்டுகள்(1×4,32,000)=1 சரணம்
                           ------------------
கூடுதல்             - 43,20,000 ஆண்டுகள்=ஒரு மகா யுகம்.

உலகில் தூய்மையும் நேர்மையும் குறைய குறைய ஒவ்வொரு யுகத்திலும் ஒரு பங்கு குறைந்து கலியுகத்தில் 4,32,000 ஆண்டுகள் ஆகிறது.

இதை வேறு விதமாக கூறினால் ஒரு மகாயுகத்தில்
சத்திய யுகம்-40%
திரேதா யுகம்-30%
துவாபர யுகம்-20%
கலி யுகம்       -10%

என இதுவரை தனது தாத்தாவின் டைரிக் குறிப்புகளில் உள்ளதாக ஆண்ட்ரூ தத்தா கூறுகிறார்.

இதற்கு மேல் விம் சோத்தரி தசாவில் 120 ஆண்டுகள் மனித ஆயுளாக  வந்த விதத்தை விவரிக்கிறார்.

காலச் சக்கரத்தின் வட்ட அளவு 360°. இதைக் கொண்டு ஒவ்வொரு யுகத்திலும் வாழ்ந்தவர்களின் ஆயுளைக் கணக்கிடும் போது

சத்ய யுகத்தில் 6,91,200(40%)÷360= 1920 ஆண்டுகள்
திரேதா யுகத்தில் 3,88,800(30%)÷360=1080 ஆண்டுகள்
துவாபர யுகத்தில் 1,72'800(20%)÷360=480 ஆண்டுகள்
கலி யுகத்தில்           43,200(10%)÷360=120 ஆண்டுகள்

என கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் 120 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாவின் ஆயுள்-10சரணங்கள்- 43,20,000 ஆண்டுகள் என பார்த்தோம்
ஒரு சரணத்தின் ஆண்டு 4,32,000 ஆண்டுகள்.
இதுதான் கலியுகத்தின் மொத்த ஆண்டுகள்.

ஒரு மணி நேரம் =60 நிமிடங்கள்=60×60=3600 விநாடிகள்.

கலியுகத்தின் 4,32,000ஆண்டுகளை 3600ஆல் வகுக்க கிடைப்பது 120 ஆண்டுகள் என்பதும் விம்சோத்தரி தசா ஆண்டுகளை குறிப்பதாக தத்தா கூறுகிறார்.

மேலும் கலியுகத்தின் மொத்த ஆண்டுகள் 4,32,000 ஆண்டுகளை பிரம்மனின் 10சரணங்களால் வகுக்க கிடைப்பது 43,200 ஆகும்.
இதை 3600ஆல் வகுக்க கிடைப்பது 12 ராசிகள் என்றும் கூறுகிறார்.

விம்சோத்தரி தசை ஆண்டுகள் 120 ம் கோள்களுக்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டன?

இதை ஆண்ட்ரூ தத்தா தங்கள் குடும்ப சொத்தாக வைத்துள்ள ஸ்ரீலங்காவிலிருந்து வெளிவந்த "சாமுத்ரிகா அங்க லட்சணம்" என்ற நூலின் துணைக் கொண்டு விளக்குகிறார்.

மேற்படி நூலின் படி ஒரு மனிதனின் உடல் அங்க அளவுகள் அவனது விரல் அங்குலாஸ்தி அளவுகளைக் கொண்டு அளக்கப்படுகிறது.

மேற்படி அளவீடுகளை கொண்டு ஒரு மனிதனின் பிறப்பு நேரத்தை தாம் சரி செய்து கொள்வதாக தத்தா கூறுகிறார்.

இவ்வாறு அளக்கப்படும் உடல் அங்கங்களின் அளவுகளை நான்கு மடங்கு ஆக்கினால் சம்பந்தப்பட்ட மனிதனின் சரியான உயரம்
கிடைத்து விடும் என்றும் கூறுகிறார்.

அந்த அளவீடுகளைக் கொண்டே விம்சோத்தரி திசையில் கோள்களுக்கு ஒதுக்கப்பட்ட திசை ஆண்டுகளை கூறுகிறார்.

அந்த நூலில் கூறியுள்ளவாறு:

தலைப் பகுதி                                         -சூரியன்      -1.5 அங்குலம்
கண் முதல் மூக்கு வரை                        -சந்திரன்      -2.5. அங்குலம்
கழுத்து இணைப்பு                                -செவ்வாய்   -1.75 அங்குலம்
அசையும் பகுதிகள் புஜங்கள்              -புதன்           -4.25 அங்குலம்
கீழ்ப்பகுதி தொடை வரை                      -குரு             -4.00 அங்குலம்
மர்ம உறுப்புக்கள் பகுதி                         -சுக்கிரன்      -5.00 அங்குலம்
பாதங்கள்                                                 -சனி             -4.75அங்குலம்
உடம்பில் துளை உள்ள பகுதிகள்-          -ராகு             -4.5.  அங்குலம்
துளை அங்கங்களுக்கு எதிர் பகுதி-       -கேது           -1.75 அங்குலம்

மேற்படி அங்க அளவுகளை நான்கு தத்துவங்களால் பெருக்க விம்சோத்தரி திசை ஆண்டுகள் கிடைக்கும். அதாவது
புதன்-          4.25×4=17 ஆண்டுகள்
கேது-           1.75×4= 7 ஆண்டுகள்
சுக்கிரன்-      5.0 ×4=20 ஆண்டுகள்
சூரியன்-       1.5×4=  6 ஆண்டுகள் 
சந்திரன்-       2.5×4= 10 ஆண்டுகள்
செவ்வாய்-   1.75×4= 7 ஆண்டுகள்
ராகு-              4.5. ×4=18 ஆண்டுகள்       
குரு-               4.0×4=16 ஆண்டுகள்
சனி-               4.75×4=19 ஆண்டுகள்
                    ---------------------------------------
                                    120 ஆண்டுகள்.
                    ----------------------------------------
இவ்வாறு விம்சோத்தரி திசையில் கோள்களுக்கான திசை வருடங்கள் பிரிக்கப் பட்டுள்ளன.

விம்சோத்தரி திசை வருடங்களுக்கான வரிசை முறை.

ராகு கேது அச்சுக்கள் கோள்களை இரண்டு பிரிவாக பிரிப்பதை படத்தில் காணலாம்.

ராகு-18, செவ்வாய்-7, குரு-16, சனி-19 என 60ஆண்டுகள் ஒரு பிரிவாகவும் கேது-7, சந்திரன்-10, சுக்கிரன்-20, புதன்-17,சூரியன்-6 ஆண்டுகளாக 60 ஆண்டுகள் மற்றொரு பிரிவாகவும் விம்சோத்தரி திசை ராகு கேது அச்சுக்களுக்கு இடையே செயல்படுகிறது.

வேகமான செயலில் இருந்து மெதுவான செயலுக்கு ஆத்மன் செல்வதைப்போல. வேகமாக செல்லும் கோள் புதனிலிருந்து மெதுவாக செல்லும் கோள் சனி கோளுக்கு விம்சோத்தரி திசை செலுத்தப் படுகிறது.

இதன்படி புதன்-கேது-சுக்கிரன்-சூரியன்-சந்திரன்- செவ்வாய்-ராகு-குரு-சனி என்ற வரிசை முறையில் விம்சோத்தரி திசை இயங்குகிறது.

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய படி மனிதன் என்பவன் குழந்தையிலிருந்த்(புதன்) உடல்ரீதியாக வளர்ச்சி பெற்று வளர்ந்து முதிய மனிதன்(சனி) ஆகிறான்.
whatsapp பதிவு...

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு