சூரிய கிரகணம் (Solar Eclipse)
விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி (26.12.2019) வியாழக் கிழமை இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு. பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும், அமாவாசை அன்று சூரிய கிரகணமும், ஏற்படுவது வழக்கம். சூரிய கிரகணம் என்றால் என்ன? சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது. கிரகண சூட்சமம்: பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும். உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்கச் செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது. கிரகணம் என்றால் அது அசுபமான நிகழ்வு என்று நி