சூரிய கிரகணம் (Solar Eclipse)
விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி (26.12.2019) வியாழக் கிழமை இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சந்திரன் பூமியையும்,. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன்- பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.
கிரகண சூட்சமம்:
பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும்.
உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்கச் செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது.
கிரகணம் என்றால் அது அசுபமான நிகழ்வு என்று நினைக்கின்றனர். ஆனால் கிரகணம் என்பது ஒரு மிகச் சிறந்த பிரார்த்தனை செய்யக் கூடிய சுப நேரம். அதாவது கற்பனைக்கூடிய செய்யக் கூடியாத அளவிற்கு நற்பலனை அடைவதற்கு இந்த கிரக நேரத்தில் பூஜை செய்வது முக்கியம். இதனை பல ஞானிகள் செய்துள்ளனர். செய்தும் வருகின்றனர்.
சூரியன் என்று எடுத்துக் கொண்டால் அரசு ஆள்பவர்களுக்கும், அரசு ஆள நினைப்பவர்களுக்கு, தலைவர்களுக்கு, உயர்பதவி தேவை என நினைப்பவர்கள், வீடு வாங்க நினைப்பவர்கள், வியாபாரம், தொழிலில் முதலிடத்தைப் பிடிக்க நினைப்பவர்கள் எல்லாம் இந்த கிரகண கால கட்டத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.
யார் வெளியில் வரக் கூடாது?
பொதுவாக யாரும் கிரகண நேரத்தில் வெளியில் வராமல் இருப்பது நல்லது. குறிப்பாக கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள், மாதவிலக்கு ஆன பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் எப்போது உணவருந்த வேண்டும்?
கிரகண நேரத்தில் உணவு அருந்தக் கூடாது என்பது விதி. அது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கவும் செய்யப்பட்டுள்ளது. கிரகண காலத்தில் வயிறு காலியாக இருப்பது நல்லது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் இவ்வளவு நேரம் உணவு அருந்தாமல் இருக்க முடியாது அல்லவா, அதன் காரணமாக வியாழக்கிழமை விடியற்காலை 4.30 மணி முதல் 5.30 மணிக்கு சிறிதளவேனும் உணவை எடுத்துக் கொண்டு விடுங்கள். இது மற்றவர்களும் பின்பற்றலாம். 8 மணிக்கு பின் நீங்கள் உணவு, தண்ணீர் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.
எந்த நட்சத்திரத்திற்கு கிரகணம் பிடிக்கிறது?
சூரிய கிரகணம் மூலம் நட்சத்திரத்திற்கு பிடிக்கின்றது. ஏற்கனவே 4 கிரகங்கள் உள்ள தனுசு ராசியில் மூல நட்சத்திரம் இருக்கின்றது. இதனால் மேலும் சிக்கல் ஆகுமோ என்ற எண்ணம் வேண்டாம்.
மூல நட்சத்திரத்திற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்களான கேட்டை மற்றும் பூராடம் ஆகிய நட்சத்திரத்தினருக்கு தோஷம் பிடிக்கின்றது.
மூல நட்சத்திர அதிபதி கேது, கேட்டை அதிபதி புதன், பூராடம் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த அதிபதிகள் ஆளும் மற்ற ராசியில் இருக்கும் நட்சத்திரத்தினரும் பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது அசுவினி, மகம் நட்சத்திரனரும் முறையாக வழிபாடு செய்வது நல்லது.
கிரகண தோஷம் ஏற்படும் நட்சத்திரங்கள்
மூலம் - கேது
கேட்டை - புதன்
பூராடம் - சுக்கிரன்
அஸ்வினி - கேது
மகம் - கேது
மேலும் இந்த அதிபதிகள் ஆளும் ராசிகளான மிதுனம் - புதன் ரிஷபம், துலாம் - சுக்கிரன் ஆகிய ராசிகள் தோஷம் உள்ளது. இவர்கள் கிரகண நேரத்தில் வழிபாடும், அதன் பின்னர் தோஷம் நீங்க சில முறைகளையும் பின்பற்றுவது நல்லது.
எப்படி வழிபடுவது?
கிரகணம் 8 மணிக்கு பிடிக்கின்றதென்றால் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே குளித்து தயாராகிவிடுங்கள்.
பின்னர் இந்த கிரகண நேரத்தில் நாம் என்ன நினைக்கின்றோமோ அதை வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். மறக்காமல் “ஸ்ரீ ராமஜெயம்” எழுதுங்கள்.
ஒரு நோட்டில் கிரகணம் முடியும் வரை ஜெய் ஸ்ரீ ராம் அல்லது, ராமா ராமா அல்லது ஸ்ரீ ராம ஜெயம் எழுதுங்கள்.
ஏனென்றால் ராம நாமம் இருக்கும் இடத்தில் அனுமன் இருப்பார். அனுமன் இருக்கும் இடத்தில் நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள் அண்டாது.
கிரகணங்கள் இறைவனைப் பிரார்த்திப்பதற்காகக் கொடுக்கப்பட்ட காலமாக பார்க்கப்படுகின்றது. இந்த நேரத்தில் வெளியில் வந்தால் தீய கதிர்வீச்சுக்கள் தாக்கும். ஆனால் நாம் வீட்டிலிருந்து இறைவனைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த ஒரு தடையும் இல்லை.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
- மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும்,
- அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும்,
- பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும்,
- பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும்.
- அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம்.
அதனால் இயல்பாக செய்யும் வேலையை விடுத்து, முழுவதுமாக இறைவனை சரணாகதி அடைவது நல்லது.
கிரகணத்தின் பின் செய்ய வேண்டியவை:
கிரகணம் முடிந்த பின்னர் கடலிலோ அல்லது கல் உப்பு சிறிது போட்ட அந்த தண்ணீரில் குளித்தல் நல்லது. அப்படி செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலில் இருந்து அகலும்.
ஏனென்றால் அவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பார்கள், வலியை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் கிரகண நேரத்தில் வெளியில் வந்தால் அது மேலும் கூடுதல் ஆக வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் வெளியில் வருதல் கூடாது.
அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வாருங்கள். குறிப்பாக அனுமன் கோயிலுக்கு சென்று நீங்கள் எழுதிய ராம ஜெயம் வைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறந்தது. இப்படி செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
தர்ப்பைப் புல்
எப்போதும் கிரகண காலத்தில் உணவின் மீதும், குடிக்கும் தண்ணீர், பயன்படுத்தும் நீரின் மீதும் போட்டு வையுங்கள். ஏனெனில் இந்த தர்ப்பை புல் தீய கதிர்வீச்சுகளிலிருந்து நம்மை காக்கக் கூடியது.
ஒரு சிறிய கலனில் நீர் வைத்து அதில் தர்ப்பை புல் போட்டு வையுங்கள். அதைனை கிரகணம் முடிந்த பின்னர் உங்கள் வீட்டில் அல்லது அருகில் உள்ள பால் உள்ள மரத்திற்கு (வேப்ப மரம், எருக்கன் செடி) ஊற்றிவிடுங்கள்.
இப்படி நீங்கள் வழிபாடு செய்தால் நீங்கள் நினைத்ததை இறைவன் அருளுவார்.
கோயில் நடை அடைப்பு:
- திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் 13 மணி நேரம் அடைக்கப்படும் அதாவது டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- இதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலும் டிசம்பர் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.
நன்றி...
Comments