Don't Do This | தவிர்க்க வேண்டியவை
- மேஷ லக்கினத்தில் திருமணம் செய்யக்கூடாது
- சுக்கிரன் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் இந்நாளில் திருமணம் செய்யக்கூடாது
- கரிநாள் வரும் நாட்களில் சுபகாரியம் செய்யக்கூடாது
- காலற்ற தலையற்ற உடலற்ற நட்சத்திர நாளில் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது
- ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களில் வீடு கட்டும் வேலை செய்யக்கூடாது
- வீட்டின் வடகிழக்கு மூலையில் கழிவறை படிக்கட்டு சமையல் செய்யும் அறை எந்த காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது
- கிழக்கு அல்லது வடக்கு பார்த்து படி ஏறும்படி அமைக்கக்கூடாது
- தென்கிழக்கு அறையில் புதுமணத்தம்பதியர் படுக்கவே கூடாது
- ஓரே குடும்பத்தை சார்ந்த மூத்தவர் இருக்கும் பகுதிக்கு தெற்க்குப் பகுதியில் இளையவர் இருக்கக்கூடாது
- ஓரே தாய் வயிற்றில் பிறந்த இரு பெண்களுக்கு ஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்யக்கூடாது
- ஆண்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது
- பெண்கள் இரவில் எந்த காரணம் கொண்டும் தலைவாரிப் பேன் பார்க்க கூடாது
- திருமண தசபொருத்தம் பார்க்கையில் ரச்சு பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது
- சனி ஓரையில் புதிய தொழில் தொடங்கக்கூடாது
- மாலை நேர பிரதோஷ வேளையில் சாப்பிடுதல் கூடாது
- விநாயகர் பூஜையில் துளசியை சேர்க்கக்கூடாது
- பெயர் எண்ணின் கூட்டுத்தொகை 2-4-7-8 என அமைவது கூடாது
- மறைந்தவர் புகைப்படத்தை பூஜை அறையில் சாமிபடங்களுக்கு மேற்புறம் வைக்கக்கூடாது
- திருமண தேதி கூட்டு தொகை 4-5-7-8 என வரக்கூடாது
- 1 கூட்டு தேதி பிறந்தவர்கள் கருப்பு நிறம் உபயோகிக்கக் கூடாது
- எந்த லக்கினமாக இருந்தாலும் பாதகாதிபதி இரத்தினம் அணியக்கூடாது
- ரத்தினம் வைத்த மோதிரத்தை அடகு வைத்தல் கூடாது
நம்மில் பலர் தவிர்க்க முடியாத காரணத்தைக் காட்டி பல காரியங்களை வேண்டாத நாளில் செய்து விடுகிறோம் ஆனால் அவசியம் சில விசயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என நம் பழைய சாஸ்திர நூல்கள் அறிவுறுத்துகிறது அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்
- சூரியன் பலம் பெற்றவர்கள் உஷ்ண சம்பந்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடக்கூடாது
- சந்திரன் பலம் பெற்றவர்கள் சீதளம் தரும் உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளக்கூடாது
- ஆண்களுக்கு ஜென்ம நட்சத்திர நாளில் திருமணம் செய்யக்கூடாது
- ஒருவனுடைய மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போது சமுத்திர ஸ்நானம் செய்யக் கூடாது
- 18 அடி நீள அகலத்தில் வீடு கட்டுதல் கூடாது
நன்றி....
Comments