GOVERNMENT JOB / அரசு உத்தியோகம் அமையும் யோகம் பற்றி....
http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Recruitment அரசு உத்தியோகம் அமையும் யோகம் நமக்கு உண்டா? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இதோ இந்த பதிவு உபயோகமானதாக அமையும்: மாணவர்களான அனைவரும் கல்வியை கடமையாக கொண்டு படித்து வரும் இந்த சமயத்தில் இந்த பதிவு அவர்களுக்கு ஒரு வழிகாட்டி போல பாதையை ஏற்படுத்தி தரக்கூடும் என நம்புகிறேன். அரசு உத்தியோகத்திற்க்கு முதலில் கல்வி தகுதி தேவை அந்த கல்வியைக் குறிக்கும் பாவம் பற்றி முதலில் கவனிப்போமாக. கல்வியை குறிக்கும் பாவங்கள்(இடங்கள்): உயர்நிலைப்பள்ளிக் கல்வி:- (+2, SSLC, Metric) 3,4,5-ம் இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், கல்விக்கு அதிபதியாகிய புதன், இவைகளின் பலத்தால் ஒருவர் உயர்நிலைக்கல்வி பெறலாம். உயர்கல்வி:- (கல்லூரிப் பட்டம்) 2,3,4,5-ம் இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், கல்விக்கு அதிபதியாகிய புதன், இவர்களின் பலத்தால் ஒருவர் பட்டப்படிப்பு கல்வி கற்கலாம். ஆராய்ச்சித் துறையில் பட்டப்படிப்பு:- (M.SC, MA, M.Phil) 2,3,4,5-ம் இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்...