BUSINESS MAN / ஜாதகத்தில் வியாபாரம்

ஜாதகத்தில் வியாபாரம்


இன்று மக்கட் சமூகத்தில் பெரும்பாலோர் வியாபாரம் செய்வதிலேயே அதிக நாட்டம் செலுத்துகின்றனர். அரச உத்தியோகத்தார், செல்வந்தர், பாமரர் ஆகிய பலதிறத்தினரும் வியாபாரத்தை முழுநேர உழைப்பாகவோ அல்லது பகுதி நேர உழைப்பாகவோ அல்லது பகுதி நேர உழைப்பாகவோ கருதிச் செயற்படுகின்றனர். ஆனால் எல்லோரும் இத்துறையில் வெற்றி பெறுவர் எனத்துணியவியலாது.  இவர் வியாராத்தில் முனைப்போடு ஈடுபட்டுப் பெருநிதி ஈட்டவும் பலர் எதிர் பாராத வகையில் முதல் இழந்து பலவகை கஷ்டங்களையும் எதிர் நோக்குகின்றனர். இதற்கு காரணம் ஜாதகத்தில் வியாபாரத்தை குறிக்கும் கிரக நிலைகள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திருப்பதுதான்.  ஆதலால் வியாபார தொழிலில் ஈடுபட விரும்புவோர் முதற்கண் தமது ஜாதகத்தை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். அதாவது ஜாதகத்தில் அத்தைகைய தொழில் முயற்சிக்குப் பயன் உண்டா? இல்லையா? என்பதைத் தீர்மானித்துக் கொள்வது அவசிய கடமையாகும்.
வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற ஜாதகத்தில் இலக்கினம், சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்கள் பலம் பொருந்தி இருக்க வேண்டும். அன்றியும் 2,4,7,10,11,12-ம் இடங்களின் பலமும் அவசியம் வேண்டற்பாலதாகும். இவற்றை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

இலக்கினம்:

ஜாதகத்தில் இலக்கினம் முக்கிய இடத்தை வகிப்பது நாம் அறிந்ததேயாம் கட்டைவிரல் போன்று இலக்கினம் பிரதான இடத்தை வகிக்கின்றது. (ரோமர் இனத்தவர்கள் கட்டைவிரல்க் கொண்டே கைரேகைப்பலன் அறிவார்களாம்.) இலக்கினம் என்னுமிடத்து இலக்கினாதிபனின் இருப்பு, ஆதிபத்தியம், உறவு, திருஷ்டி, பார்வை, நோக்கு, அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும். வியாபாரம் ஸ்திரமாக உறுதியாக அமைவதற்க்கு இலக்கினம் பலம் பொருந்தி இருப்பது அவசியம் ஆகும்.
சந்திரன்:
இலக்கினத்துக்கு அடுத்தபடியாகச் சந்திரனின் பலாபலம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். சந்திரன் மனோகாரகன் ஆதலால் சந்திரனின் நிலைமையைக்கொண்டு வியாபாரம் நடத்துபவனின் மனப்பாங்கை மனோநிலை அறியலாம். மனஉறுதி இல்லாவிடத்து வியாபாரத்தில் செய் தொழிலில் உயர்ச்சி காணவியலாது. பொது ஜன அபிமானம் ஆதரவைப் பெறுவதற்க்கும் மனம் நல்ல முறையில் அமைந்திருப்பது அவசியமாகும். ஆதலால் சந்திரன் வியாபாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறார் என்பது நன்கு தெளிவாகும். இவர் தானியங்களுள் நெல், அரிசி, ஆகியவற்றையும் நவரத்தினங்களுள் முத்தையும், உலோகவர்க்கங்களுள் செம்பையும் காரகத்துவமாக உடையவராவார் மற்றும் துணிவகைகள் நீர்ப்பண்டங்கள்(watery goods) மட்பாண்டங்கள் ஆகியனவும் இவரது ஆதிக்கத்துக்குட்பட்டவையாம். ஆதலால் இவற்றைக் கிரய விக்கிரயஞ் செய்யும் வியாபாரிகளுக்குச் சந்திரன் பலமாக இருக்க வேண்டும்.

 சூரியன்: 

இவர் சக்தி, மனிதவலு இரண்டுக்கும் காரகத்துவம் பெற்றவர். வியாபாரம் முதலிய சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்வோர்க்குச் சக்தியும், வலுவும் வேண்டற்பாலனவாகும். இன்னும் சூரியன் இராஜக்கிரகம் ஆகும். ஆதலால் வியாபாரிகளாகவுள்ளோர் அரசாங்க உதவி தொடர்பு என்பனவற்றைப் பெறுவதற்க்கு ஜாதகத்தில் சூரியன் பலவானாக இருப்பது அவசியமாகும். மற்றும் துணிவு, தைரியம்,அந்தஸ்து, கௌரவம், அதிகாரம் என்பனவற்றுக்கும் இவரே பொறுப்பாவார். எனவே சூரியனின் பலம் வியாபாரி ஒருவருக்கு வேண்டற்பாலதாகும் என்பது தெளிவாகும் இவர் உலோக வர்கங்களுள் பொன்னையும், நவரத்தினங்களுள் மாணிக்கத்தையும், துணிகளுள் கம்பளி,பட்டு, என்பனவற்றையும் மருந்து வகைகளையும் காரகதுவப்படுத்துவார். ஆதலால் இவற்றை வியாபாரப் பொருட்களாக கொண்டு ஆதாயம் பெற விரும்புவோர் ஜாதகத்தில் சூரியன் மிக்க பலவானாக இருப்பது அவசியம்.

புதன்:

இவர் தான் வியாபாரத்திகுக் காரகத்துவம் பெறும் முக்கியஸ்தர் சிறுவியாபாரி முதல் பெரும் வர்த்தகர் வரை உள்ள அனைவரது ஜாதகத்திலும் புதன் பலவானாக இருப்பார். அத்துடன் மனோசக்தி, மதிநுட்பம், திட்டமிடுதல், கணிதவிற்பனன் ஆகியவற்றைக் வழங்குபவராகவும் புதன் விளங்குகின்றார் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு இவ்வம்சங்கள் நிச்சயம் வேண்டற்பாலனவாகும். இவர் நவரத்தினங்களுல் நீலமணியையும் (sapphire) பஞ்சலோகங்களுள் பித்தளையையும் தமது ஆதிக்கத்துக்குட்படுத்துவார். இவற்றைக் கிரய விக்கிரஞ்செய்யும் வியாபாரிகட்கு ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது விரும்பத்தக்கதாகும். மேலும் வியாபாரத்திற்கு இன்றியமையாத வாக்குவன்மை, பேச்சுத்திறன் என்பனவற்றுக்கும் புதன் சுபத்துவம் பெறுதல் வேண்டும். சுருங்கக்கூறுமிடத்து விளம்பரத்திறன் சாமாத்காரமாகப் பேசும் இயல்பு ஆகியவற்றுக்குப் புதன் பொறுப்பாக இருப்பார் என்பதாம்.

சனி:

வியாபாரம் மட்டுமல்லாது அனைத்துத் தொழில்களுக்கும் உழைப்பும் முயற்சியும் தேவை இவை இரண்டிற்க்கும் காரகத்துவமாக இருப்பவர் சனி. எனவே ஒருவர் வியாபாரத்தில் உயர் நிலை அடைவதற்க்கு ஜாதக்தில் சனி பலமாக அமையவேண்டும் என்பது பெறப்படும். சனி பலவீனமாக இருந்தால் உழைப்பும் உறக்கமும் குன்றி முதலிழந்து நிற்க வேண்டிய அவலநிலைதான் ஏற்படும். மேலும் வியாபாரத்திற்கு இன்றியமையாத பொதுஜன ஆதரவு பிரபலம் ஆகியவற்றுக்கும் சனி காரணமாகிறார். ஆதலால் வியாபார முக்கியஸ்தர் ஒருவரின் ஜாதகத்தில் சனி பலம்பொருந்தி இருக்க வேண்டும் என்பது ஒரு தலைத்துணிப்பாகும். இவர் உழுந்து முதலிய கறுப்புத் தானியங்களையும், உலோகவர்கங்களுள் இரும்பையும் நவரத்தினங்களையும் காரகத்துவமாக உடையவர். ஜாதகத்தில் சனி ஆதிக்கம் பொருந்திக் காணப்படுமிடத்து இப்பொருட்களின் கிரய விக்கிரயங்களால் கூடிய ஆதாயம் பெற்றிடலாம்.

குரு:

இவர் தனக்காரகன் ஆவார். அதாவது வியாபாரத்திற்க்கு மிக இன்றியமையாத நிதிக்குக் காரகத்துவம் பெற்றார் என்பதாம். மேலும் வியாபாரத்தில் கடைபிடிக்க வேண்டிய உண்மை, நேர்மை என்பனவற்றைப் பேணி நடக்க உதவுபவரும் இவரே ஆவார். ஜாதகத்தில் குரு பலவீனமாக அமையும் போது வியாபாரத்தில் கறுப்பு மார்க்கட், கலப்படம், மோசடி என்பன மேலோங்கி நிற்கும் இவர் உலோகவர்க்கங்களுள் தங்கத்தையும், நவரத்தினங்களுள் புஷ்பராகத்தையும் தானியங்களுள் பச்சைக்கடலையையும் காரகத்துவமாக உடையவர் இவற்றுடன் வங்கித் தொடர்பு வங்கிகணக்கு ஆகிய இரண்டும் இவரது பிரதான காரகத்துவங்களாக அமையும்.

இவற்றோடு ஜாதகத்தில் 2,4,7,10,11,12-ம் இடங்களின் பாலபலன்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?