GOVERNMENT JOB / அரசு உத்தியோகம் அமையும் யோகம் பற்றி....

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Recruitment

அரசு உத்தியோகம் அமையும் யோகம் நமக்கு உண்டா? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இதோ இந்த பதிவு உபயோகமானதாக அமையும்:


மாணவர்களான அனைவரும் கல்வியை கடமையாக கொண்டு படித்து வரும் இந்த சமயத்தில் இந்த பதிவு அவர்களுக்கு ஒரு வழிகாட்டி போல பாதையை ஏற்படுத்தி தரக்கூடும் என நம்புகிறேன். அரசு உத்தியோகத்திற்க்கு முதலில் கல்வி தகுதி தேவை அந்த கல்வியைக் குறிக்கும் பாவம் பற்றி முதலில் கவனிப்போமாக.
கல்வியை குறிக்கும் பாவங்கள்(இடங்கள்):
  1. உயர்நிலைப்பள்ளிக் கல்வி:- (+2, SSLC, Metric) 3,4,5-ம் இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், கல்விக்கு அதிபதியாகிய புதன், இவைகளின் பலத்தால் ஒருவர் உயர்நிலைக்கல்வி பெறலாம்.
  2. உயர்கல்வி:- (கல்லூரிப் பட்டம்) 2,3,4,5-ம்  இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், கல்விக்கு அதிபதியாகிய புதன், இவர்களின் பலத்தால் ஒருவர் பட்டப்படிப்பு கல்வி கற்கலாம்.
  3. ஆராய்ச்சித் துறையில் பட்டப்படிப்பு:- (M.SC, MA, M.Phil) 2,3,4,5-ம்  இடங்கள் அதன் அதிபதிகள் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்கள், மேலும் 9,10ம் இடங்கள் அதன் அதிபதிகள், அதில் இருக்கும் கிரகங்கள் கல்விக்கு அதிபதி புதன் இவர்களின் பலத்தால் ஒருவர் ஆராய்ச்சித்துறை கல்வி பெறலாம்.

(இதற்க்கு உண்டான விளக்கங்கள் பின்னாளில் POST  செய்யப்படும். தற்போது அரசு உத்தியோகத்திற்க்கு உண்டான கோள் நிலைகளை பற்றிப் பார்ப்போம்.)

நிர்வாகத்துறையில் உயர் பதவி பெறும் அமைப்பு ( IAS ; IPS) 

  1. 9-10 ம் அதிபதிகளின் கேந்திர-கோண அமைப்புடன் (தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இணைப்பு, பார்வை - பரிவர்த்தனை அமைப்புடன்) இருப்பது.
  2. 8-10 ம் அதிபதிகள் இணைந்து கேந்திர (அ) சமசப்தம பார்வை.
  3. சூரியன்-சந்திரன்-9-10ம் வீட்டுடன் (அ) அதன் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது.
  4. 9ம் அதிபதி 9ல்,10ம் அதிபதி 10ல்.
  5. லக்னாதிபதி 8ல் ஆட்சியாய் அமைவது.
  6. உச்சக் கிரகம் 9ல் (அ) 10ல் அமைவது.
  7. 8-9-10 ம் அதிபதிகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் பெறுவது.
  8. ராகு (அ) கேது 9-10 அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது.
  9. சுக்கிரன் பலம் பெற்று சூரியன், சந்திரன் (அ) 9-10 ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது.

அரசு பதவி பெறும் அதிகாரிகளுக்கான கிரக சேர்க்கைகள்:

  1. லக்னாதிபதி 5ல் பலம் பெற்று இருந்தால் அரசு உளவுத் துறையில் பணி புரிவார்.
  2. 3ம் அதிபதி பலம் பெற்று கேந்திர- திரிகோணம் பெறுவது.
  3. சூரியன் 6,8,12 ல் (அ) 6,8,12 ம் அதிபதியானால் அரசு உத்தியோகத்தில் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படலாம். ஆனால் சூரியனுக்கு குருவின் பார்வை கிடைத்தால் அரசு உத்யோகத்தில் இருந்து தானாகவே விலகி ஓய்வுதியம் பெறுவார் மேலும் 3ம் அதிபதியும் 6,8,12 ல் இருப்பது அரசு உத்தியோகத்திற்க்கு ஆகாத அமைப்பாகும்.
  4. அம்ஸா லக்கினத்தை சூரியன், சுக்கிரன் பார்த்தால் அரசு உத்தியோகம் அமையும்.
  5. அம்ஸா லக்கனத்தில் புதன், சேர்க்கை, பார்வை கிடைப்பது.
  6. சூரியன் ஆண் ராசியில் இருந்து 9, 10 க்குடையவர்களால் பார்க்கப்படுவது.
  7. 10மிடத்திற்க்கு அதிகமான சுபகிரக பார்வை கிடைப்பது (அ) 4 கேந்திராதிபதிகள் 10ல் இருப்பது.
  8. 6ம் அதிபதிக்கு 10ல் சனியும் 10 ம் அதிபதியும் கூடுவது.
  9. 10ம் அதிபதி இருக்கும் அம்சாதிபதி சனியாகி, 6க்குடையவருடன் சம்பந்தம் பெறுவது.
  10. (a) 10ம் வீட்டின் ஆரம்பமுனையின் sub-lord 2,6,10,11 ம் வீட்டின் அதிபதியானாலும் அரசு உத்தியோகம் அமையும்.
  11. 10ம் இடத்தில் சூரியன் (அ) செவ்வாய் பலம் பெறுவது.
  12. நவாம்சத்தில் 10மிடத்தில் சூரியன் இருப்பது.
  13. 9ம் அதிபதி லக்கனத்தில் இருந்து குருவால் பார்க்கப்படுவது.
  14. குருவும் புதனும் இணைந்து பலம் பெறுவது.
  15. செவ்வாய் ஆட்சி (அ) உச்சம் பெற்று ராசிக்கோ. லக்கனத்திற்கோ 10மிடத்திற்கோ (அ) அதன் அதிபதிக்கோ சம்பந்தம் பெறுவது.
  16. செவ்வாய் 3,6,10,11 ல் இருந்து குருவின் பார்வை பெற்றால் அரசு உத்யோகம் பெற்று ஓய்வூதியம் பெறுவார்.

மிக உயர்ந்த பதவி பெறும் அரசு அதிகாரிகளுக்கான கிரக சேர்க்கைகள்:

  1. 9ம் அதிபதியும் 10ம் அதிபதியும் லக்கனத்துடன் (அ) லக்கனாதிபதியும் சம்பந்தம் பெறுவது.
  2. சூரியனும், சந்திரனும் பலம் பெற்று 9,10ம் இடங்களுக்கு சம்பந்தம் பெறுவது.
  3. 5ம் அதிபதி 10ல் 4ம் அதிபதி 9ல்.
  4. 10ம் அதிபதி 10ம் மிடத்தையும், 9ம் அதிபதி 9ம் இடத்தையும் பார்ப்பது.
  5. லக்கனாதிபதி 8ல் ஆட்சி பெறும் அமைப்பு.
  6. சூரியன் ராசி (அ) அம்சத்தில் உச்சம் பெறும் அமைப்பு.
  7. 9,10க்கதிபதிகள் அம்சத்தில் சம்பந்தம் பெறுவது.
  8. 8ம் அதிபதி அம்சத்தில் உச்சம் பெறுவது.
  9. கர்மாவை உணர்த்தும் அதிபதி சூரியன் (அ) சந்திரனுக்கு சம்பந்தம் பெறுவது (அ) 9மிடம் (அ) 10மிடத்திற்க்கு சம்பந்தம் பெறுவது. 8 மிடம் 10மிடம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெறுவதும் சூரியனும் சந்திரனும் பலம் பெற்று 10ம் இடத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுக்கிரனுக்கு, சூரியன், சந்திரன், 9மிடம் 10மிடம் 8மிடம் இவைகளில் யாராவது ஒருவருடன் சம்பந்தம் பெறும் அமைப்பும் அரசுத் துறையில் உயர் பதவி தரும்.
  10. 9,10மிடம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெறும் அமைப்பு 9,10ம் இடங்களில் உச்சம் பெற்ற கிரகம் இருக்கும் அமைப்பு.
  11. 8 மிடம் பணியாற்றுவதற்கான முக்கியமான இடமாகும் 8,10 ம் இடங்களுக்குரிய சம்பந்தம் (அ) 8,9,10ம் இடங்களுக்குறிய சம்பந்தம் உயர் பதவி தரும்.
  12. ராகு கேது இவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதிகள் கர்மாவை உணர்த்தும் கிரகங்களாகும். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் உயர் உத்யோகம் அமையும்.
  13. 4,9 ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறும் அமைப்புடன் லக்கனாதிபதி பலம் பெறுவது.
                                                                      பதவிகள் ஏற்றம் பெறும்........

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?