PREVENTION IS BETTER THAN CURE / வருமுன் காப்போம்-விபத்தைத் தடுப்போம்

இன்றைய விஞ்ஞான உலகில் பயணங்கள் மிகவும் எளிதாகவும், விரைவாகவும், எவ்வளவு எளிதானதோ அவ்வளவு ஆபத்தாகவும் அமைந்துள்ளன. பஸ், ரயில், கப்பல், விமானம் என நவீன மயமாக்கப்பட்டும் அவைகளால் விரைவிற்கு தகுந்த விபத்துக்களும் ஏற்படுகின்றன. பயணங்களில் ஒன்றாகச் சென்றவர்களின் ஒரு சிலர் மட்டும் பாதிக்கப்படாமல் இருப்பதும் மற்றும் பலர் ஒருவருக்கு அவரது வாழ்க்கைப் பாதையிலே விபத்துக்களை சந்திக்கும் நிலை ஏற்படுமா? அவைகள் எந்தக்கால கட்டத்தில் ஏற்படும். அவற்றிலிருந்து தப்பி பிழைக்கும் பாக்கிய சாலிகளா என்பதை அறிந்து செயல்பட்டால் விபத்திலிருந்து தப்பிக்கலாமே. "ஜாதகத்தில் வழி இருந்தால்" விபத்தைத் தடுத்து வருமுன்காத்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக சனி- செவ்வாய்-யுரேனஸ்- சூரியன்- ராகு-கேது- விபத்துக்களுக்கு காரணமான கிரகங்களாகும். 6-8-12 ம் இடங்கள் விபத்துக்களைகுறிக்கும் வீடுகளாகவும் அமைகின்றன.
4-மிடம், அதன் அதிபதி - சுக்கிரன் வாகனங்களை குறிப்பதாகவும் 3 மிடம் சிறுதூரப்பயணங்களையும் 9ம் இடம் நீண்ட தூரப் பயணங்களையும் குறிப்பதாகவும் அமைந்துள்ளன.

கீழ்கண்ட கிரக சேர்க்கைகள் ஒருவருக்கு இருக்குமானால் அவரது வாழ்க்கைப் பாதையில் விபத்துக்களை சந்திக்கும் நிலை ஏற்படும்:

  1. சந்திரன் பலமற்று 6-8-12-ம் இடங்களில் இருந்து ராகு (அ) சனியுடன் சம்பந்தப்படுவது.
  2. 8 ம் அதிபதி 12 ல் இருந்து பாவிகளால் பார்க்கப்படுவது.
  3. லக்னத்தின் 22 வது திரேக்காணம் விருட்சிக ராசியின் முதல் திரேக்காணமாகும் நிலை
  4. 8ம் அதிபதி 3 (அ) 9ம் வீட்டோடு தொடர்பு கொள்ளும் நிலை
  5. சனி(அ)யுரேனஸ் 3(அ) 8ம் இடம் அதன் அதிபதிகளுடன் சம்பந்தப்படும் நிலை. இதில் யுரேனஸ் விருட்சிகராசியில் இருப்பது மிகவும் ஆபத்தான நிலையாகும்.
  6. 3,8 ம் அதிபதகள் ஒருவருடன் ஒருவர் சம்பந்தப்படும் நிலை.
  7. 6 ம் அதிபதி 1-8-10 ல் இருந்து பாவிகள் சம்பந்தம் பெறும் நிலை
  8. சூரியன், செவ்வாய், யுரேனஸ் இவைகளுக்கும் 8 ம் இடம் அதன் அதிபதிக்கும் சம்பந்தம் எற்படும் நிலை.
  9. செவ்வாய், கன்னியிலும், புதன் மேஷத்திலும் இருந்து ராகு சனி சம்பந்தம் ஏற்பட்டால் பல விபத்துக்களை சந்திக்க நேரிடும்

II வாகனங்களால் (பஸ்-ஜுப்-லாரி-ரயில்) ஏற்படும் விபத்துக்களான கிரக நிலைகள்:

  1.  சூரியன், செவ்வாயும், பாவிகளுடன் 4 ம் இடத்தில் இருப்பது.
  2. சூரியன்- செவ்வாய்- சனி இணைந்து 4 (அ) 10 ம் இடத்தில் இருப்பது.
  3. 4ம் இடம் (அ) 4 ம் அதிபதி பாவிகளுக்கிடையே இருப்பது.
  4. 1+4+8 ம் அதிபதிகள் இணைந்திருப்பது
  5. 3-8 ம் அதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்து 4 மிடத்தில் இருப்பது.
  6. 4-8 ம் அதிபதிகளின் சம்பந்தம்.
  7. லக்னத்தின் 22 வது திரேக்காணம் மிதுனம் 3வது திரேக்காணமாக அமையும் நிலை
  8. 8 ம் இடம் அதன் அதிபதி 3-12 அதிபதிகளால் பார்க்கப்படும் நிலை
  9. 4,8 ம் அதிபதிகள் சுக்கிரனுடன் கூடி 6-8-12 ல் அமைவது
  10. ஆத்ம காரகன் தனுசு நவாம்சம் பெற்றால் வாகனங்களில் இருந்து விழும் நிலை ஏற்படாலம் மேலும் ஆத்ம காரகனுக்கு 3ல் பாவிகள் இருந்தாலும் வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

III விமானப் பயணங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கான கிரக நிலைகள்:

  1. பாவிகள் (சனி- ராகு-செவ்வாய்-கேது) மிதுன ராசியில் கேது சாரம் பெற்றாலும்- தனுசு சுக்கிர சாரம் ராசியில் பெற்றாலும் விமான விபத்துக்களால் மரணம் ஏற்படலாம்.
  2. சனி 8 ல் பலமற்றும் 4 ம் அதிபதி 6 லும் சுபர்சம்பந்தம் பெறாத நிலை
  3. 3-9-8 ம் இடங்கள் (அ) அதன் அதிபதிகளுடன் சனி-செவ்வாய்-ராகு-கேது சம்பந்தம் பெறும் நிலை

IV விபத்துக்கள் எப்போது ஏற்படும்?
1-2-3-7-8 ம் இடங்களின் தசாபுக்திகள்(அ) அந்த இடங்களில் உள்ள கிரகங்களின் தசாபுக்திகளில் விபத்துக்கள் ஏற்படலாம்.

Comments

Popular posts from this blog

முத்துக்குமாரனடி அம்மா அம்மா செல்வமுத்துக்குமாரனடி அம்மா

ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு

விம்சோத்தரி திசை கணிதம் பிரித்தது எப்படி?